காடு வளர்ப்பில் சீனாவின் விடா முயற்சி
2023-06-07 16:22:07

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பாலைவனமாதல் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார். சீனாவின் வடக்குப் பகுதியில் “பச்சைப் பெருஞ்சுவரை” கட்டியமைக்க விடா முயற்சி செய்ய வேண்டுமென ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

வட சீனாவில் பாலைவனமாதல் கட்டுபாட்டில் சாதனைகள் என்ன? புதிய அதிசயத்தை எப்படி படைத்தது?சீனாவின் உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பு மற்றும் உலகின் சுற்றுச்சூழலுக்கு என்ன முக்கியத்துவம் உண்டா?என்பது பற்றி விளக்கிக் கூறுகிறோம்.

பாலைவனமாதல் என்பது மனிதகுலத்தின் உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் உலகளாவிய முக்கிய உயிரினச் சூழல் சவால் ஆகும். உலகில் பாலைவனமாதலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனைக் கட்டுப்படுத்த, 1970களின் இறுதி முதல், சீனாவின் வட மேற்கு, வடக்கு மற்றும் வடக்கிழக்குப் பகுதிகளில் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கப்பட்டது. கடந்த 40க்கும் அதிகமான ஆண்டுகளின் விடா முயற்சியுடன், பாலைவனமாதல் பகுதிகளில் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் உயிரின வாழ்க்கை சூழலில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பாலைவனம் குறைக்கப்பட்டதோடு, பச்சையான காடுகளும் பெருகின. சீனாவின் வட மேற்கு, வடக்கு மற்றும் வடக்கிழக்குப் பகுதிகளில் காடுகளின் பரப்பளவு விகிதம் 1977ஆம் ஆண்டில் 5.05விழுக்காட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு 13.84விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலைவன கட்டுப்பாடு மற்றும் தடுப்பில், இயற்கை விதி மற்றும் நாட்டின் நடைமுறைகளுக்குப் பொருத்தமான சிறப்பானப் பாதையைச் சீனா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இன்று, இம்மூன்று பகுதிகளில் காடு வளர்ப்பு உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பாக மாறியுள்ளன. வட சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கு பெரும் முக்கியத்துவத்தை அது தந்துள்ளது. “பச்சை பெருஞ்சுவர்” என அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதனைப் பாராட்டினார்.