பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதல் மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்
2023-06-07 20:01:03

சீனாவின் பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதலாவது மன்றக் கூட்டம் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் ஷென்சென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் அதற்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

சோஷலிச பண்பாட்டின் புதிய சாதனையைப் பெறுவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டு வருகிறது. கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பண்பாட்டு ஆற்றல் கட்டுமானத்தை ஆட்சிமுறையின் முக்கிய இடத்தில் வைத்து, பண்பாட்டின் பரவல் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, சோஷலிச பண்பாட்டு ஆற்றல் கட்டுமானத்தில் உறுதியுடன் நடைபோட்டு வருகிறோம் என்று தனது கடிதத்தில் ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.

மேலும், புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையையும் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் குறிக்கோளையும் செயல்படுத்தி, பண்பாடு சார் புதிய கடமைக்கு தோள் கொடுத்து, தன்னம்பிக்கை, திறப்பு மற்றும் புத்தாக்கத்துடன், முழு தேசத்தின் பண்பாட்டு புத்தாக்கத் திறனைத் தூண்டிவிட்டு, புதிய வரலாற்று துவக்கப் புள்ளியில் பண்பாட்டின் செழுமையைத் தொடர்ந்து மேம்படுத்தி, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்கி, மனிதகுல நாகரிக பரிமாற்றத்தை ஊக்குவித்து, தேசிய வளர்ச்சிக்கு ஆன்மீக வலிமையை ஊட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.