சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பங்கு
2023-06-07 16:52:08

சீனாவின் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதனைகளைப் பெற்றுள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.8 விழுக்காடு அதிகமாகும்.

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிவர ஆய்வுப் பிரிவு தலைவர் கூறுகையில், முதல் 5 மாதங்களில், சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள், முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இதில், ஆப்பிரிக்காவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிப்பு விகிதம் சுமார் 30 விழுக்காடாகும். ஆசியான் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான இவ்விகிதம் முறையே 20 மற்றும் 10 விழுக்காட்டுக்கு மேலாகும். தற்போது, நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மொத்த அளவில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் விகிதாசாரம் 52.8 விழுக்காட்டை எட்டி, அன்னிய முதலீட்டின் சீரான அதிகரிப்புக்கு அவை ஆக்கமுடன் பங்காற்றியுள்ளன என்றார்.