சௌதி அரேபியாவிலுள்ள ஈரான் தூதரகம் திறப்பு
2023-06-07 11:11:44

சௌதி அரேபியாவில் ஈரான் தூதரகம் 6ஆம் நாள் திறக்கப்பட்டது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் பிக்டெலி, சௌதி அரேபிய துணை வெளியுறவு அமைச்சர் யூசெஃப் முதலியோர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இன்று, ஈரான் மற்றும் சௌதி அரேபிய உறவுக்கான முக்கிய தினமாகும். இரு நாடுகளின் ஒத்துழைப்பு புதிய காலத்தில் நுழைந்துள்ளது என்று பிக்டெலி தெரிவித்தார்.