அமெரிக்காவின் பொருளாதார வலுக்கட்டாயத்தை எதிர்க்க வேண்டும்:சீனா
2023-06-07 17:28:34

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் ஜுன் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கூறுகையில்,

அமெரிக்காவின் பொருளாதார வலுக்கட்டாயம், சீனாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார். அரை மின் கடத்தி தயாரிப்பு சாதனங்களின் ஏற்றுமதி மீது தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அமெரிக்கா கட்டாயப்படுத்தியுள்ளது. அரை மின் கடத்தி தொழிலின் வளர்ச்சியை அமெரிக்காவின் இச்செயல் சீர்குலைத்ததோடு, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நலனையும் பலதரப்பு வர்த்தக விதிமுறையையும் உலக பொருளாதார ஒழுங்கையும் பாதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அமெரிக்காவின் பொருளாதார வலுக்கட்டாய நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.