கஹோவ்கா நீர் மின் நிலையத்தின் அணை சேதம் மீது சீனா கவலை
2023-06-07 17:22:21

 

ஹேர்சன் பகுதியில் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கஹோவ்கா நீர் மின் நிலையத்தின் அணை ஜுன் 6ஆம் நாள் தாக்கப்பட்டு வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆற்று நீர் வெளியே பாய்ந்து செல்கிறது. இந்நகரில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவும் உக்ரைனும் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள குடிமக்களை வெளியேற்றின.

அதே நாள், உக்ரைன் பிரச்சினை பற்றிய ஐ.நா. பாதுகாப்பவையின் அவசரக் கூட்டத்தில், ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் உரை நிகழ்த்துகையில், கஹோவ்கா நீர் மின் நிலையத்தின் அணை சேதம் மீது சீனா கவனம் செலுத்துவதோடு, மனித நேயம், பொருளாதாரம், இயற்கைச் சூழல் ஆகியவற்றுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மோதலில் சிக்கியுள்ள தரப்புகள் சர்வதேச மனித நேய சட்டத்தைப் பின்பற்றி, பொது மக்கள் மற்றும் ஆக்கப்பணி வசதிகளின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும், ஐ.நாவும் மனிய நேய அமைப்புகளும் தொடர்புடைய மீட்புதவிக்கு உதவியளிப்பதை சீனா ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.