ஹோண்டுராஸ் அரசுத் தலைவரின் பயணம் மீது சீனா எதிர்பார்ப்பு
2023-06-07 18:32:32

ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் மேற்கொள்ள உள்ள சீனப் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜுன் 7ஆம் நாள் கூறுகையில், ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடத்த உள்ளனர். ஹோண்டுராஸுடன் இணைந்து, இப்பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை ஆழமாக்கி, ஒத்துழைப்பை விரிவாக்கி, நட்புறவை வலுப்படுத்தி, இருதரப்புறவின் சீரான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.