சீனாவில் கிராமப்புற வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கை
2023-06-07 20:00:11

2வது ஐ.நா மனித உறைவிட மாநாட்டின்போது, சீனாவின் தொங்ஜீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவின் ஆய்வறிக்கை ஒன்றை ஐ.நா மனித உறைவிட பணியகம் ஜுன் 6ஆம் நாள் வெளியிட்டது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் கார்பன் நடுநிலை துறையிலுள்ள சீனாவின் அனுபவங்கள் இவ்வறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

3 ஆண்டுகளைச் செலவழித்து நிறைவேற்றப்பட்ட இவ்வறிக்கையில், சோஷான் நகரின் திங்ஹாய் பிரதேசத்திலுள்ள கிராமப்பகுதியை மாதிரியாகக் கொண்டு, கார்பன் இல்லாத இலக்கு ரீதியில் கிராமப்புற வளர்ச்சித் திட்டப்பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கரி குறைந்த வளர்ச்சி நகரங்களில் பலமுறையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல வளரும் நாடுகளில், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி இன்னும் காணப்படுகிறது. இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சியில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது, காலநிலை மாற்றம் ஆகிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பது மேலும் கவனிக்கத்தக்கது என்று இக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.