இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.5 விழுக்காடாக இருக்கும்
2023-06-08 19:51:29

2023-2024, நடப்பு நிதியாண்டில், இந்தியாவில் பணவீக்க விகிதம் 4 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கும் என்றும், அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம் 6.5 விழுக்காடாக வளர வாய்ப்புள்ளது என்றும் இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழன் அன்று கூறினார். இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையில், நாணயக் கொள்கையை அறிவித்த மத்திய வங்கி ஆளுநர், உலகளாவிய நிச்சயமற்ற நிலையில் இந்தியப் பொருளாதாரம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.