போக்குவரத்து துறைக்கு தேசிய வளர்ச்சி வங்கி ஆதரவு
2023-06-08 19:43:47

சீனத் தேசிய வளர்ச்சி வங்கி 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு முதல் 5 மாதங்களில், இவ்வங்கி, போக்குவரத்து துறைக்கு 26870 கோடி யுவான் கடன் தொகையை வழங்கி, இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, விமான நிலையம் உள்ளிட்ட துறைகளின் முக்கிய திட்டப்பணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய், குவாங்டொங்-ஹாங்காங்-மக்காவ் முதலிய முக்கிய பகுதியின் உயர் தர நவீன போக்குவரத்து அமைப்புமுறையின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து துறையின் நுண்மதி மற்றும் பசுமை வளர்ச்சியுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு கட்டுமானத்துக்கும் இவ்வங்கி ஆதரவு அளித்து வருகின்றது.