மத்திய கிழக்கு நாடுகளில் நல்லிணக்கத்தை அமெரிக்கா தடுக்க முடியாது
2023-06-08 10:47:56

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டோனி பிளிங்கன் ஜூன் 6முதல் 8ஆம் நாள் வரை சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் பர்ன்ஸ் ஏப்ரல் மாதத்திலும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சல்லிவன் மே மாதத்திலும் சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டனர். இவ்வாண்டில் இதுவரை சௌதி அரேபியாவில் அமெரிக்க உயர் அதிகாரிகளின் 3ஆவது பயணம் இதுவாகும்.

கூட்டணி நாடான சௌதி அரேபியாவுடனான உறவை நிலைப்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டது.

மத்திய கிழக்குப் பிரதேசத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தல் மற்றும் நிதானமற்ற காரணி அமெரிக்கா தான் என்று 78விழுக்காட்டினர் கருதுவதாக 2022ஆம் ஆண்டு அரபு கொள்கை மற்றும் ஆய்வு மையம் 14 அரபு நாடுகளில் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளிடையில் வரவேற்கப்படாத நாடாக மாறுவது என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால், மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிகழ்ந்த புவிசார் அரசியல் மாற்றத்தைக் கூடிய விரைவில் தடுத்து சௌதி அரேபியாவுடனான உறவை நிதானப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்குக் கூட்டணி முறைமையைக் காப்பற்றும் வகையில், சௌதி அரேபியாவுக்கு அமெரிக்க அரசு அடுத்தடுத்து அதிகாரிகளை அனுப்பி வருகிறது.  

அமெரிக்காவில் தீவிரமாகி வரும் பணவீக்கத்தைத் தணிவுபடுத்த, எண்ணெய் விலை குறைப்புக்கு சௌதி அரேபியாவின் ஆதரவை அமெரிக்கா நாடுவது பிளிங்கனின் இப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.