31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி தீபத் தொடரோட்ட நிகழ்ச்சி துவக்கம்
2023-06-08 16:36:03

31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்ட நிகழ்ச்சியின் துவக்க விழா ஜுன் 8ஆம் நாள் பிற்பகல் ச்செங்தூ நகரில் நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியின் தீச் சுடர் ச்செங்தூ நகரிலிருந்து புறப்பட்டு, தொடரோட்டத்தின் துவக்கப் புள்ளியான பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டது. ச்செங்தூ நகரில் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச வரையறை, சீனத் தனிச்சிறப்பு, ஈர்ப்பு ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச விளையாட்டுப் போட்டி 50 நாட்களுக்குப் பிறகு ச்சொங்தூ நகரில் நடைபெறவுள்ளது.