சீனாவின் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் உற்பத்தி அதிகரிப்பு
2023-06-08 19:49:04

 

சீனத் தேசிய கடல் எண்ணெய் குழுமம் ஜுன் 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனா தற்சார்பாக வளர்த்த முதலாவது ஆழ்கடல் எண்ணெய் வயல் குழுவான லியூஹுவா-16-2, 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் உற்பத்திக்கு வந்த பிறகு, மொத்தம் 1 கோடி டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது. தற்போது இந்த வயல் குழுவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 11 ஆயிரம் டன்னுக்கு மேலாகும்.

3 எண்ணெய் வயல்களைக் கொண்ட லியூஹுவா-16-2 எண்ணெய் வயல் குழு, நீருக்கடியில் உற்பத்தி மாதிரியைப் பயன்படுத்தி, ஆசியாவில் மிகப்பெரிய ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. சீனாவில் தொலைதூர கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யக் கூடிய திறனைக் கொண்ட முதலாவது ஆழ்கடல் எண்ணெய் வயல் குழுவாக, சூறாவளி காலத்தில் ஆளில்லா உற்பத்தி முறையுடன் எண்ணெய் உற்பத்தியை அது உறுதி செய்ய முடியும்.

தற்போது 300 மீட்டருக்கு மேலான ஆழமுடைய கடற்பரப்பில் 12 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை சீனா வளர்த்துள்ளது. ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆண்டு உற்பத்தி அளவு 1 கோடி டன்னைத் தாண்டியுள்ளது.