உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு
2023-06-08 18:29:17

இவ்வாண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டை ஐ.நா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் அண்மையில் உயர்த்தியுள்ளன. சீன பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இது வெளிகாட்டியது. சீன பொருளாதார வளர்ச்சி, உலக பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து பங்காற்றும் என்று 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

சீன வர்த்தக முன்னெடுப்பு சம்மேளனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இவ்வாய்வில் கலந்துகொண்ட 97 விழுக்காடான அன்னிய தொழில் நிறுவனங்கள், கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முதல் இப்போது வரை, சீன அரசு வெளியிட்ட கொள்கைகளுக்கு மனநிறைவு தெரிவித்தன. உயர் நிலை திறப்பு பணியை சீனா தொடர்ந்து உறுதியாக முன்னேற்றி, மேலதிக அன்னிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.