© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது கூறுகையில், உள் மங்கோலியா தனது நெடுநோக்கு தகுநிலையில் நிலைத்து நின்று, புதிய வளர்ச்சி கருத்தைச் சரியாகவும் முழுமையாகவும் செயல்படுத்தி, பசுமை வளர்ச்சியைத் திசையாகக் கொண்டு, சீனாவின் நவீனமயமாக்கத்தில் தனக்காக புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜுன் 7, 8 ஆகிய நாட்களில் பயன்னூர் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, பாலைவனமயமாதல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பிறகு, அவர் ஹோஹாட் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். 7ஆம் நாள் பிற்பகல் சொங்ஹுவான் தொழில் பூங்காவில் பயணம் மேற்கொண்ட அவர், உள்ளூர் புதிய எரியாற்றல் மற்றும் புதிய மூலப்பொருள் தொழிலின் வளர்ச்சி, தொழில் கட்டமைப்பு சீராக்கம், கரி குறைந்த பசுமை வளர்ச்சி உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தார். 8ஆம் நாள் முற்பகல், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் குழு மற்றும் அரசு வழங்கிய பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிந்து, இப்பிரதேசத்தின் பல்வேறு பணிகளில் பெறப்பட்ட சாதனைகளை பாராட்டினார்.
மேலும், சீனாவின் முக்கிய எரியாற்றல் மற்றும் மூலவளத் தளமாகவும், விவசாய மற்றும் கால்நடை பொருட்களின் உற்பத்தித் தளமாகவும், வடக்கிற்கு திறந்து விடும் முக்கிய இடமாகவும் உள் மங்கோலியா திகழ்கிறது. தொழில் கட்டமைப்பு சீராக்கத்தை விரைவுப்படுத்தி, மேம்பாடு மற்றும் தனித்துவம் வாய்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும். இதனிடையே, நாட்டின் வடக்கு பகுதியில் சூழலியல் பாதுகாப்பை வலுப்படுத்தி, இது தொடர்பான முக்கிய திட்டப்பணிகளை சீராக நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய இனப் பகுதியின் பொருளாதாரக் கட்டுமானம், பண்பாட்டு கட்டுமானம், சுற்றுச்சூழல் நாகரிகக் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் சீனத் தேசத்தின் பொது சமூகம் பற்றிய ஒத்த கருத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.