ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா
2023-06-08 10:07:51

லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் வணிக ரீதியான தொலை உணர்வு தவகல் சேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும்.  லிஜியன்-1 ஏவூர்தி, 2ஆவது முறையாக ஏவுதல் பணியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிகிறது.