பயங்கரவாத எதிர்ப்புக்கான முதலாவது சீன-பாகிஸ்தான்-ஈரான் இயக்குநர் நிலை பாதுகாப்பு கலந்தாய்வு
2023-06-08 18:21:12

பயங்கரவாத எதிர்ப்புக்கான முதலாவது சீன-பாகிஸ்தான்-ஈரான் இயக்குநர் நிலை பாதுகாப்பு கலந்தாய்வு ஜுன் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 8ஆம் நாள் கூறுகையில், பயங்கரவாத எதிர்ப்பு நிலைமை, நாட்டைக் கடந்த பயங்கரவாதிகளை ஒடுக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து 3 தரப்பினர்கள் கருத்துக்களை ஆழமாகப் பரிமாற்றிக் கொண்டனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்புக்கான 3 தரப்புகளின் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறையில் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.