புல்வெளியிலுள்ள நவீன நகரமான ஹோஹாட்
2023-06-08 18:44:47

மங்கோலிய மொழியில் ஹோஹாட் என்பதற்கு பச்சை நிற நகரம் என்று பொருள். சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ள உங் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான ஹோஹாட், சீனாவின் பால் நகரமாகவும் அழைக்கப்படுகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, சீனா-மங்கோலியா-ரஷியா பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் முக்கிய பகுதியாகவும், சீனாவின் வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளை ஒன்றிணைந்த முக்கிய நகரமாகவும் இது திகழ்கிறது. அத்துடன், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை மற்றும் திறப்பு கொண்ட ஒரு நவீன நகரமாகவும் இது திகழ்கிறது.