ஆகுஸ் குழுவின் அணுத் துறை முயற்சி வெற்றி பெறாது
2023-06-10 18:34:51

அண்மையில் நடைபெற்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு மீண்டும் பெரும்பாலான நாடுகளின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் ஆகுஸ்(AUKUS) குழு மேற்கொண்டு வரும் முயற்சியின் நோக்கம் பற்றி மக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளதை இது காட்டுகின்றது. அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பின் பெயரில், சொந்த நலன்களுக்காகவும் அமெரிக்காவின் புவியமைவு அரசியல் உத்திக்காகவும் ஆஸ்திரேலியாவை முன்னின்று நடத்தி, பிராந்திய மோதலைத் தூண்டிவிடுவதில் நேட்டோ எடுத்த நடவடிக்கைகளை ஆசிய-பசிபிக் பிரதேசத்திலும் பிரதிபலித்து பயன்படுத்துவது அதன் உண்மையாகும்.

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் விதிகள், தென் பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத இல்லா பிரதேசம் தொடர்பான ரலோதாங்கா ஒப்பந்தம் ஆகியவற்றை மீறியுள்ளது. தொடர்புடைய நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு ஒப்படைக்கவுள்ள டன்கணக்கான அணுப் பொருட்களால், 64 முதல் 80 வரையான அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட முடியும். இந்நடவடிக்கை தென்கிழக்காசியாவில் அணு ஆயுதமின்மை பிரதேசத்தின் கட்டுமானத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆசியான் அமைப்பு உறுதியான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆசிய-பசிபிக் பிரதேசம் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்குப் பிரபலமான பிரதேசமாகும். மாறாக பெரிய நாடுகளுக்கிடையில் போட்டி நடத்தும் இடம் அல்ல. அணுப் பாதுகாப்பானது மனித குலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய விடயமாகும். அதனை ஒரு சிலர் தனி நலன்களை நாடும் அரசியல் வசதியாகப் பயன்படுத்தக் கூடாது.