பல துறைகளில் சீன மற்றும் ஹோண்டுரஸ் ஒத்துழைப்பு
2023-06-13 20:13:17

சீன மற்றும் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர்களின் முன்னிலையில் 13ஆம் நாள் பல துறைகளின் ஒத்துழைப்பு குறித்த 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒப்பந்தம், ஹோண்டுரஸுக்கு மேலும் பரந்த சந்தை வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று ஹோண்டுரஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 26ஆம் நாள், ஹோண்டுரஸ், சீனாவுடன்  தூதாண்மை உறவை நிறுவிய 182ஆவது நாடாக மாறியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ அம்மையாருடன் 12ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய போது, இதை உயர்வாகப் பாராட்டினார்.

இரு நாட்டுறவு வேகமாக வளர்ந்து வருகின்றது. சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் இறக்குமதித் துறையில் ஹோண்டுராஸ் வேகமாக அதிகரிக்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 206 விழுக்காடு அதிகமாகும்.

சீனாவுடன் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எரிசக்தி மற்றும் கனிம மேம்பாடு மற்றும் பயன்பாடு, விவசாய நடவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை எதிர்பார்த்துள்ளதாக ஹோண்டுராஸ் தெரிவித்தது.

ஒரே சீனா என்ற கோட்பாட்டு அடிப்படையில், ஹோண்டுராஸ் நட்புறவை வளர்க்க சீனா ஆட்டமசைவின்றி விரும்புகின்றது. ஹோண்டுரஸின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை உறுதியாக ஆதரிக்கின்றது. சீனாவுக்கும் ஹோண்டுரஸுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இரு நாடுகளின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு நன்மை அளிப்பது உறுதி.