சீனா முன்வைத்த கருத்துகளுக்கு மத்திய கிழக்கு ஊடகங்கள் பாராட்டு
2023-06-15 20:22:43

பாலஸ்தீனப் பிரச்சினைகள் குறித்து சீனா முன்வைத்த மூன்று கருத்துகளுக்கு, எகிப்தின் குடியரசு நாடேடு, கத்தாரின் அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் பிற்பகல், பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீன மக்கள், சட்டப்பூர்வ தேசிய உரிமைகளை மீட்டெடுக்கும் நீதி இலட்சியத்துக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்த 3 கருத்துகள் மீண்டும் காட்டியுள்ளன.

1967ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட எல்லையின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராக, முழு அரசுரிமை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அடிப்படை தீர்வு மட்டுமல்ல, அரபு அமைதி ஆலோசனைகளின் முக்கிய அம்சமும் ஆகும் என்று சீனா கருதுகிறது.

இதற்கிடையில், பாலஸ்தீன பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே ஒரு வழிமுறை என்றும் சீனா சுட்டிக்காட்டியது.