சீனாவுடனான பகைமைக்கு ஐரோப்பா எதிர்ப்பு
2023-06-25 20:14:03

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 24ஆம் நாள், ஜெர்மனி மற்றும் பிரான்சில் மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு, பெய்ஜிங்கிற்குத் திரும்பினார். இப்பயணத்தின் போது இவ்விரு நாடுகளின் அரசியல் மற்றும் வணிகத் துறையினர்களை அவர் சந்தித்து, சீனாவின் வளர்ச்சி, உலகிற்குக் கொண்டு வரும் வாய்ப்பாகும். அபாயம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சீனாவுடனான தொடர்பைத் துண்டிப்பதை எதிர்ப்பதாகவும், அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எந்த வகையிலான முகாம் பகைமையையும் தாங்கள் எதிர்ப்பதாக அவர்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

இப்பயணப் போக்கில், பொருளாதார உலகமயமாக்கத்துக்கு சீனா ஆதரவு அளிப்பது, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சீரானது, சீன-ஐரோப்பிய கூட்டு வெற்றிக்கான பரந்த வாய்ப்பு முதலிய அம்சங்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாண்டு, சீன-ஐரோப்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்புகளுக்குமிடையில் அடிப்படை நலன் மோதல் ஒன்றும் இல்லை. தொடர்பைத் துண்டிப்பதை எதிர்த்து, உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்றால், இரு தரப்பும், அவற்றுக்கிடையிலான வளர்ச்சியிலிருந்து பயனடையும்.