உண்மையான சின்ஜியாங்:ஜப்பானிய சுற்றுப்பயணக் குழு
2023-06-28 16:12:32

அண்மையில், 20 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானிய சுற்றுப்பயணக் குழு 9 நாட்களில் உரும்சி, டர்பன், கோர்லா, காஷ்கர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். அவர்கள் சின்ஜியாங்கின் பழக்கவழக்கங்கள் மற்றும் தேசிய பண்பாட்டை அனுபவித்தனர். இக்குழுவின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் நேரலை மூலம், சின்ஜியாங்கில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பல பாராட்டுக்கள் பெறப்பட்டன.

ஜப்பானில் உள்ள சீனத் தூதரகத்தால் ஆரம்பிக்கப்பட்ட சின்ஜியாங் பயண நடவடிக்கையில் சேர, ஜப்பான் மக்கள் சுறுசுறுப்பாகப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவில் பங்கேற்றனர்.

சின்ஜியாங் பற்றி சில மேற்கத்திய ஊடகங்கள் வர்ணித்ததற்கு "முற்றிலும் மாறுபட்டது" என்று பல ஜப்பான் மக்கள் பதில் கூறினர். எதிர்காலத்தில் சீனாவுக்குச் செல்ல ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினர். பிரெஞ்சு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாக்சிம் விவாஸ் மூன்று முறை சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கத்திய ஊடகங்களின் கூற்றுக்கள் பொய்களாகும். அரசியல் நோக்கங்களுக்காக சீனாவின் மீது அவதூறு கூறி வருகின்றன என்பதை மென்மேலும் அதிகமான மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

கேட்பதை விட கண்களால் பார்ப்பது மேலும் நம்பகமானது என்ற பழமொழி ஜப்பான் மற்றும் சீனாவில் உண்டு. ஜப்பானிய சுற்றுலா குழுவின் சின்ஜியாங் பயணம் மூலம், உள்ளந்தராங்களைக் கொண்ட வரந்திகள் உடைக்கப்பட்டன.