© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜூலை 4ஆம் நாள், ஷாங்காய் ஒத்துவைப்பு அமைப்பில் ஈரான் சேர்ந்ததை அடுத்து இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
இவ்வமைப்பு நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில், பல்வேறு பிரதேசங்களிருந்து வரும் வேறுப்பட்ட நாகரிகங்கள் மற்றும் வளர்ச்சி மாதிரிகள் கொண்ட நாடுகள் ஒன்று திரண்டு, நட்புறவை அமைத்து, அணிசேரா ரீதியிலான நிலைமையில் பகைமைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் புதிய ரக சர்வதேச அமைப்பாக வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகின்றன.
தற்போது, சர்வதேச நிலைமை ஆழமாக மாறிக்கொண்டுள்ளது. முகாம் பகைமையைத் தீவிரமாக்குவதன் மூலம் குறிப்பிட்ட மேலை நாடுகள் விலை கொடுத்து, உலகளாவில் குழப்பம் விளைவித்து, சொந்த மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காத்து வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடும் போது, சமத்துவம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, சகிப்புத் தன்மை முதலிய எழுச்சியை ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது நடப்பு யுகத்தில் அரிதான ஒன்றாகும். அதோடு, தொடர்ந்து வளர்ந்து வரும் இவ்வமைப்பு, ஆசிய-ஐரோப்பிய கண்டத்துக்கும், உலகின் அமைதி மற்றும் செழுமைக்கும் மேலதிக ஆற்றலையும் ஊட்டி வருகின்றது.