அணுக் கழிவு நீரை வெளியேற்றுவதால் இகழ்ச்சிக்கு உள்ளாகும் ஜப்பான்
2023-07-08 19:12:41

ஜப்பான் அணு ஆற்றல் நிறுவனம், 7ஆம் நாள், டோக்கியோ மின்சார நிறுவனத்திற்கு, ஃபுகுஷிமா அணு கழிவு நீர் வெளியேற்றும் வசதிகளுக்கான சான்றிதழை வழங்கியது. இது தொடர்பாக உள்நாட்டிலும்  வெளிநாடுகளிலும் எழுந்த கடுமையான  எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத ஜப்பான் அரசு, அணுக் கழிவு நீர் வெளியேற்றத்தை அமலாக்கத்துக்கு அடுத்த காலடியை எடுத்து வைத்துள்ளது.

அணுக் கழிவு நீர், அணுக் கழிவு நீர் மட்டுமே. அதுபற்றி  ஜப்பான் அரசு எத்தகைய விளக்கத்தை அளித்தாலும இந்த உண்மை மாறாது.

அணுக் கழிவு நீரில் கதிர்வீச்சுப் பொருட்கள் நிறைந்தன. பெரும்பாலான கழிவு நீர் சரியாக சமாளிக்கப்பட இயலாதவை.  ஜப்பான் வெளியிட்ட தரவுகளின்படி, கையாளப்பட்ட 70 விழுக்காடான கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உரிய வரையறைக்குப் பூர்த்தி செய்யவில்லை. இந்த நீரை மீண்டும் கையாள வேண்டும்.

ஜப்பானில் உள்ள வசதிள் மூலம் அணுக்கழிவு நீரிலுள்ள கதிர்வீச்சு பொருட்களை முற்றிலுமாக நீக்க முடியாது என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட மதிப்பீட்டறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், வெளிப்புற எதிர்ப்புகள் குறித்து கவலைப்படாமல்  அணுக் கழிவு நீரை வெளியேற்றினால், ஜப்பான், வரலாற்றின் இகழ்ச்சிக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.