“அமைப்பு ரீதியான சவால்” சீனா அல்ல நேட்டா தான்
2023-07-13 18:18:10

நேட்டோவின் உச்சிமாநாடு ஜுலை 12ஆம் நாள் வில்நியூஸ் நகரில் நிறைவடைந்தது. அதற்கு முன் வெளியிடப்பட்ட உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில், சீனா, ஐரோப்பா-அட்லாண்டிக் பெருங்கடல் பாதுகாப்புக்கு “அமைப்பு ரீதியான சவால்” என்று பறைசாற்றப்பட்டது. கடந்த ஆண்டின் நேட்டோ உச்சிமாநாட்டை விட, இவ்வாண்டின் கூட்டறிக்கை, சீனாவை ஒன்றுக்குப் பத்தாக திரித்து, மேலும் அதிகமாகக் குற்றஞ்சாட்டியது.

நேட்டோ, உலகின் மிக பெரிய ராணுவக் கூட்டணியாகும். அதன் ஒவ்வொரு நெடுநோக்கு திட்டம், அமெரிக்க நெடுநோக்கு தேவைக்கிணங்க புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, சீனா, மிக முக்கிய நெடுநோக்கு எதிராளி என்பதை பைடன் அரசு, தவறாக நிர்ணயித்த பின், நேட்டோ, சீனாவுடன் மேலும் பிடிவாதமான முறையில் பழகியது. அதனால், நேட்டோ அமைப்பு, ஐரோப்பிய பாதுகாப்புக்கான பிரதிநிதி அல்ல. அது, அமெரிக்க நலனுக்கான பேணிக்காப்பாளராக மாறியது.

சீனா, ஒரு போதும் முன்முயற்சியுடன் மோதலைக் கிளப்பவும், மற்ற நாடுகளில் ஆக்கிரமிக்கவும் வில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளுக்கு, சீனா 50ஆயிரத்துக்கும் மேலானோர்களை அனுப்பியுள்ளது.

நேட்டோ, அமெரிக்காவைப் பின்பற்றி, ஐரோப்பாவைக் குழப்பமாக்கிய பின், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சீர்குலைப்பை ஏற்படுத்தினால், உறுதியான எதிர்ப்பு நேட்டோவுக்குக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.