அமெரிக்கா பயன்படுத்திய கொத்து குண்டுகளுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு
2023-07-14 14:32:02

சீனா-லவோஸ் இருப்புப்பாதையின் கட்டுமானத்துக்காக, அப்பாதையின் நெடுகில் அமெரிக்காவால் விட்டுச் செல்லப்பட்ட கொத்து குண்டுகளை அகற்ற, கட்டுமான நிறுவனம் 2 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் செலவிட்டது.

வியட்நாம் போரின் போது, இக்கொத்து குண்டுகள் அமெரிக்க இராணுவத்தால் லாவோஸில் வைக்கப்பட்டன. மேலும், உக்ரைனுக்கு 80 கோடி அமெரிக்க டாலர் கூடுதல் இராணுவ உதவியை அண்மையில் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில் அமெரிக்க சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதமான  'கிளஸ்டர் பாம்' எனப்படும் கொத்து குண்டுகளும் அடக்கம். இச்செய்தி வெளியிடடப்பட்ட பிறகு, மேலை நாடுகிடையே பரபரப்பரை ஏற்படுத்தியது. கொத்து குண்டுகளைத் தடை செய்வதற்கான சர்வதேச பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிரிட்டன், இத்தகைய ஆயுதங்களின் பயன்பாட்டை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளதுடன்,  ஸ்பெயின், கனடா முதலிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த 20 ஆண்டுகளில், கொசோவோ போர், ஈராக் போர் முதலிய பல போர்களில் கொத்து குண்டுகளை அமெரிக்கா பெரும் அளவில் பயன்படுத்தியது. முழுமையாகாத புள்ளிவிபரங்களின் படி, தொடக்கத்திலிருந்தே கொத்து குண்டுகள் சுமார் 56 ஆயிரம் முதல் 86 ஆயிரம் பொதுமக்களின் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 90% க்கும் அதிகமானோர் பொதுமக்கள் ஆவர். அவர்களில் பலர் சிறுவர்கள் ஆவர்.

அமெரிக்க இராணுவம் கொத்துக் குண்டுகளை இனி பயன்படுத்தப் போவதில்லை என்றும், அனைத்து கொத்துக் குண்டுகளும் பாதுகாப்பின் பொருட்டு முத்திரையிட்டு வைக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு 2008ஆம் ஆண்டில் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய இந்த தொகுதியான கொத்து குண்டுகள், 40 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்திரை போடப்பட்ட கொத்து குண்டுகள் தான் என்பது முக்கியமானது.