சீனப் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மை கிடைக்கும் வெளிநாட்டு முதலீடு
2023-07-18 09:15:35

சீனப் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் 5.5 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சி விகிதம், உலகின் முக்கிய வளர்ந்த  நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம். இந்நிலையில், சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக தொடர்ந்து விளங்குகிறது. வெளிநாட்டு முதலீடுகளைப் பொறுத்த வரை, வளர்ச்சி வாய்ப்பு கொண்டு வரும் பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. நுகர்வுச் சந்தையைப் பார்த்தால், முற்பாதியில் சீனாவின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 22லட்சத்து 75ஆயிரத்து 880கோடி யுவானை எட்டி, முந்தையை ஆண்டின் அதே காலத்தை விட 8.2சதவீதம் அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ்-பென்ஸ் சமீபத்தில் வெளியிட்ட விற்பனை அறிக்கையில், இந்த ஆண்டின் முற்பாதியில் சீனாவில் 3லட்சத்து 74ஆயிரத்து 600 வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்தது. வெளிநாட்டு முதலீடு, சீனப்பொருளாதார வளர்ச்சியில் இருந்து உண்மையான நலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகத்தின் கணிப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு 9.1 சதவீதம் பலன் கிடைத்துள்ளது. அதேவேளை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சுமார் 3 சதவீத பலன் கிடைக்கும். புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 4 முதல் 8 சதவீதம் வரை பலன் கிடைக்கும்.

இவ்வாண்டு முதல், அமைப்புமுறை ரீதியான திறப்புக் கொள்கையை விரிவாக்குவதிலும்,  தொழில் புரிவதற்கான சர்வதேசத் தரச் சூழலின் ஆக்கப்பணியை துரிதப்படுத்துவதிலும் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சாதகமான பின்னணில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டெஸ்லா, பைசர், ஸ்டார் பக்ஸ், அராம்கோ நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் உயர் நிர்வாக அதிகாரிகள் அடுத்தடுத்து சீனாவிற்கு வருகை தந்தனர். பொதுவாக, தொழில் நிறுவனங்கள், தொழில் புரியும்போது முதலீட்டின் மீதான வருமானம் என்பது முதன்முதலில் கருத்தில் கொள்ளப்பட்ட காரணியாகும்.

தற்போது, உலகப் பொருளாதாரத்திற்கு உயர்ந்த பணவீக்கம், புவிசார் அரசியல் மோதல், எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடி உள்ளிட்ட பல அறைகூவல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. நிலைப்புத்தன்மை என்பது ஒரு அரிய வளமாகும் என்பதில் ஐயமில்லை. சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இத்தகைய உறுதித்தன்மை கிடைக்கும். இந்நிலையில்,  சீனாவில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும் என்ற கருத்து, சர்வதேச சமூகத்தில் பிரபலமாகியுள்ளது.