பிரிட்டன் சரியான வழிமுறையின் மூலம் மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்
2023-07-21 19:19:46

3வது செலாக்-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டின் அறிக்கையில், மால்வினாஸ் தீவுகளின் அரசுரிமை பிரச்சினை சேர்க்கப்பட்டது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சைகளை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2 பெரிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இத்தீவுகளின் அரசுரிமை பிரச்சினை சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மால்வினாஸ் தீவுகள் பிரச்சினை, அடிப்படையில் காலனித்துவம் விட்டுச் சென்ற பிரச்சினையாகும் என்று சர்வதேச சமூகத்தில் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனப்பாங்கு மாற்றமானது, ஐ.நா தீர்மானத்துக்கான சர்வதேச சமூகத்தின் மதிப்பு மற்றும் பாதுகாப்பையும், பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய அர்ஜென்டீனாவின் நியாயமான கோரிக்கைக்கான ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.

பிரிட்டன், ஐ.நா தீர்மானம் மற்றும் சர்வதேச சமூகத்தின் குரலைச் சரிவர கேட்டு, அர்ஜென்டீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வெகுவிரையில் மால்வினாஸ் தீவுகளைத் திரும்பிக் கொடுக்க வேண்டும்.