கிசிங்கரின் அறிவுத்திறமை அமெரிக்காவுக்குத் தேவை
2023-07-21 14:19:23

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலைத் திங்கள் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சர் கிசிங்கரைச் சந்தித்துரையாடினார்.

அமெரிக்க அரசியல் வட்டாரத்தில், சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பு மேற்கொண்டு, கருத்து வேற்றுமையைச் சரியாகக் கையாளும் ஆற்றல்மிக்க மனிதராக கிசிங்கர் கருதப்படுகின்றார்.

இச்சந்திப்பின் போது, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வை நடத்தி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் கொள்கைகளைப் பின்பற்றுவது, சீன-அமெரிக்க உறவு நிதானமாக வளர்ந்து வருவதை விரைவுபடுத்துவதற்குரிய திறவுகோல் ஆகும் என்பதை ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளிடையே தொடர்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்வதில் நேரடியாக பங்கெடுத்தவரான கிசிங்கர், தைவான் பிரச்சினை என்பது, இரு தரப்புறவின் மிக முக்கியமான, உணர்வுப்பூர்வமான மையப் பிரச்சினையாகும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஆவர். அதனால், ஷாங்காய் கூட்டறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி, ஒரே சீனா எனும் கொள்கை, சீனாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் இந்த முறை சீனாவில் பயணம் மேற்கொண்ட போது தெரிவித்தார்.

தனிநபர் என்ற தகுநிலை ரீதியில் அவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போதும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசு ரீதியான தொடர்பு பெரிதும் அதிகரித்துள்ளது. அண்மையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர், நிதியமைச்சர், காலநிலைப் பிரச்சினைக்கான அரசுத் தலைவரின் சிறப்பு உயர் பிரதிநிதி முதலியோர் முறையே சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து, சீன-அமெரிக்க உறவின் மேம்பாடு, புதிய வயாப்புகளைச் சந்திக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.