பிரிக்ஸ் நாடுகளின் அமைப்பில் அல்ஜீரியா இணைவது நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் - அப்துல்மத்ஜித் டெப்போன்
2023-07-23 19:54:56

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அல்ஜீரியா இணைவது அந்நாட்டிற்கு நல்ல பொருளாதார எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்று அல்ஜீரிய அரசுத் தலைவர் அப்துல்மத்ஜித் டெப்போன் தெரிவித்துள்ளார். ஜுலை மாதம் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட டெப்போன், சீன ஊடகக் குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்தபோது அதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில்

கடந்த பல ஆண்டுகளில் சிறந்த மற்றும் நேர்மையான உலகத்தை உருவாக்கும் வகையில், குறிப்பாக வறிய நாடுகளுக்கு உதவி அளிப்பதில் சீனாவுடன் இணைந்து நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஒரு பல்துருவ உலகத்தை உருவாக்குவதற்கு பாடுபடுகின்றோம். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து வளர்ச்சி மற்றும் நேர்மை பற்றியும் ஐ.நா. நிறுவனங்களின் சீர்திருத்தம் பற்றியும் விவாத்துள்ளேன். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களில் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனைகளை முன்மொழிந்துள்ளோம். இந்த நிறுவனங்கள், வறிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் நலன்களைப் பிரதிநிதிப்படுத்த முடியாது.பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இணைவது, அல்ஜீரியாவுக்குப் பெரிய உதவி வழங்கும். எனவே,  பிரிக்ஸ் அமைப்பு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியில் இணைவது தொடர்பான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.