தென்பசிபிக் பிரதேசத்தில் பரவி வரும் அமெரிக்க சக்தி
2023-07-27 17:36:13

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்ளிங்கன் ஜுலை 26ம் நாள், டாங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதே நாள், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பமைச்சர் ஆஸ்டின், பப்புவா நியு கினியாவில் பயணம் மேற்கொண்டார்.

கடந்த 2 ஆண்டுகளில், இந்தோ-பசிபிக் நெடுநோக்கு திட்டத்தின் உந்து விசையுடன், அமெரிக்கா, தென்பசிபிக் பிரதேசத்தில் தனது பாதிப்பை அதிகரித்து வருகிறது. இத்தகைய முனைப்பான செயல்பாடுகள், சில ஆண்டுகளுக்கு முன், கற்பனை செய்யப்பட முடியாது.

கடந்த பத்துக்கும் மேலான ஆண்டுகளில், சீனா, பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுடன் ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது, அந்நாடுகள் மற்றும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. அதிகரித்து வரும் சீனாவின் ஈர்ப்பாற்றலைச் சமாளிக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கா, இப்பிரதேசத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியது.

பசிபிக் பெருங்கடல், அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதேசம். தென்பசிபிக் நாடுகளுக்கு நலன் தரும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கத்தக்கவை. ஆனால், அமெரிக்கா கட்டாயமாக முன்னெடுக்கும் இந்தோ-பசிபிக் நெடுநோக்கு திட்டம், இப்பிரதேசத்தில் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.