சீனாவின் மீது இணையத் தாக்குதல் நடத்தி வருகின்ற அமெரிக்கா
2023-07-27 15:34:52

சீனாவின் வூஹான் நிலநடுக்கத்துக்கான கண்காணிப்பு மையம் ஜூலை 26ஆம் நாள், அரசின் ஆதரவிலுள்ள ஹேக்கர் அமைப்பு மற்றும் சட்டத்தை மீறுபலர்களால் தாக்கப்பட்டது. இந்த முறை இணையத் தாக்குதல் அமெரிக்காவிலிருந்து வந்தது என்று தொடக்ககட்ட புலனாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் எட்வர்டு ஸ்னோடென் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, உண்மையிலே, உலக இணையத்தின் மீது அமெரிக்கா பன்முகங்களிலும் கண்காணித்துக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றது என்றார்.

உலக இணையப் பகுதியில் அமெரிக்கா மேலாதிக்கத்தை நாடி வருகிறது. ஜெர்மனியின் முன்னாள் தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையாரும், உக்ரைன், தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உயர்நிலை அதிகாரிகளும், அமெரிக்காவால் ஒற்று கேட்கப்பட்டனர்.

அமெரிக்காவின் இணையக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில், சீனா முக்கிய இலக்காக இருந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் பார்வையில், சீனாவுக்கான கண்காணிப்பை வலுப்படுத்துவது, நெடுநோக்கு போட்டிக்கான இன்றியமையாத செயலாகும்.

தகவலின்படி, அமெரிக்கா கணிப்பொறி நிரல்களின் மூலம் வூஹான் நிலநடுக்கத்துக்கான கண்காணிப்பு மையத்திலிருந்து சட்டத்தை மீறி, தொடர்புடைய தரவுகளைத் திரட்டி, சீனாவின் பாதுகாப்புக்கு அறைக்கூவலாக அமைந்துள்ளது. பாதுகாப்பு மீது அளவுக்கு அதிகமான கவலை காரணமாக, சீனாவின் மீது கட்டற்ற முறையில் இணையத் தாக்குதலை அமெரிக்கா தொடர்ச்சியாக நடத்தி வருவதை இது மீண்டும் காட்டியுள்ளது.