சீன விண்வெளி துறை வளர்ச்சியின் ஆரம்ப குறிக்கோள் பழித் தூற்றப்பட முடியாது
2023-07-29 20:15:11

நாசாவின் தலைவர் பில் நெல்சன் ஜூலை 27ஆம் நாள் அர்ஜென்டீனாவில் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆய்வில் சீனாவின் சாதனைகளை அவர் எடுத்துக்கூறியதோடு, சீனாவும் அமெரிக்காவும் விண்வெளிப் போட்டியை நடத்தி வருகின்றன என்று கூறினார். பனிப் போர் சிந்தனை உடைய கூற்று இதுவாகும். சீன-அர்ஜென்டீனா விண்வெளி ஒத்துழைப்பைச் சீர்குலைப்பது, அவரது இப்பயணத்தின் அரசியல் நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூகன் விண்வெளி நிலையம், வெளிநாடுகளில் சீனா அமைத்துள்ள முதலாவது ஆழமான விண்வெளி நிலையமாகும். இதன் மூலம் சீனாவும் அர்ஜென்டீனாவும் புற அண்டவெளியை அமைதியாகப் பயன்படுத்த முடியும். இது சர்வதேச சமூகத்துக்கும் திறந்து வைக்கப்படுகிறது.

ஆனால், விண்வெளிக் கழிவுப் பொருட்களைத் தயாரிப்பது, விண்வெளி படைக்கலப்போட்டி தொடுப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் செயல்கள், புற அண்டவெளியை அமைதியாகப் பயன்படுத்துவதற்குப் பெரும் அறைகூவலாக அமைந்துள்ளன.

தற்போது இயங்கி வரும் சீன விண்வெளி நிலையம், ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திறந்து வைக்கப்பட்ட முதலாவது விண்வெளி நிலையமாகும். அமைதியானது, சீன விண்வெளி துறை வளர்ச்சியின் ஆரம்ப குறிக்கோளாகும். இது எப்படி பழிக் கூறினாலும் மாற்றப்பட முடியாது.