ஐ.நா. பொது பேரவையின் தீர்மானம் பற்றிய அமெரிக்காவின் விளக்கம் மோசடி தான்
2023-07-31 19:30:11

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில், தைவான் பற்றிய மசோதா ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நாவில் ஒரேயொரு சட்டப்பூர்வ பிரதிநிதி சீன மக்கள் குடியரசு என்பது மட்டுமே ஐ.நாவின் 2758ஆவது தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், ஐ.நாவில் தைவானின் பிரதிநிதித்துவ உரிமை, சீனா-தைவான் உறவு பற்றிய நிலைப்பாடு ஆகியவை பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவின் தீர்மானத்தை திரித்துப்புரட்டி, தைவான் பிரச்சினையில் மோசடி செய்யும் விதமாக அமெரிக்கா இத்தகையை கருத்தைத் தெரிவித்தது. அமெரிக்கா பின்னி பிணைந்த தவறான வரலாற்றுக் கருத்தியல் சூழ்ச்சியில் இதுவும் ஒரு முக்கிய அம்சமாகும்.

தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினைக்கான நடுவராக செயல்படுவதில் பிற நாடுகளுக்கு உரிமை இல்லை. ஐ.நாவின் 2758ஆவது தீர்மானத்துக்கு ஒரேயொரு பதிப்பு உள்ளது. அதற்கு அமெரிக்காவின் விளக்கம் தேவையில்லை. போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கு, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைப்பது, அமெரிக்கா இத்தீர்மானம் பற்றி விளக்கிக் கூறியதன் உள்நோக்கமாகும். இதற்கு சீன மக்கள் எவ்விதத்திலும் அனுமதி அளிக்காது. சர்வதேச சமூகம் இதனை எதிர்ப்பது உறுதி.