சீனாவில் முதலீடுகளுக்கு மெரிக்காவின் தடை உத்தரவு
2023-08-11 10:31:26

சீனாவில் குறைக்கடத்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னேறிய தொழில் நுட்பங்களுக்கான அமெரிக்க முதலீடுகளை தடை செய்யும் வகையில், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஆகஸ்ட் 10ஆம் நாள் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த நிர்வாக உத்தரவு கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு அமலுக்கு வரும். வரும் ஒரு காலத்தில் பொது மக்களிடம்  இருந்து பதில்களைப் பெற்று, பைடன் அரசாங்கம் அதைத் திருத்தம் செய்யும் என்று அமெரிக்க செய்தி ஊடகம் கூறியுள்ளது. இந்த நிர்வாக உத்தரவு குறித்து அமெரிக்கப் பொருளாதாரத் துறை உடனடியாக கவலை எழுப்பியுள்ளது.

இந்த உத்தரவு வெளியிடுவதற்கு சுமார் 2 ஆண்டுகள் செலவிட்டுள்ளன என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன. இவ்வாண்டின் மே மாதம் நடைபெற்ற ஜி-7 அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு முன்பு அல்லது பின்பு அமெரிக்கா இந்த நிர்வாக உத்தரவை வெளியிட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க செய்தி ஊடகம் முன்பு  தெரிவித்தது. ஆனால் இதன் வெளியீடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய செயல்,  அரசியல் தந்திரம் போல நடந்து வருகிறது. 

அடுத்த ஆண்டில் அமெரிக்காவின் பொது தேர்தல் நடைபெற இருக்கும். இந்நிலையில், பைடன் அரசாங்கம் சீனாவைத் தடுப்பதன் மூலம் தேர்தலில் வாக்கு ஆதரவை பெற எதிர்ப்பார்க்கிறது. எனவே, சீனாவில் முதலீடுகளுக்கு அமெரிக்காவின் தடை உத்தரவை வெளியிடுவது அவற்றில் ஒன்றாகும் என்பதில் அதிர்ச்சி இல்லை.

இதற்கு முன்பே, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், அமெரிக்காவின் அரசு கடன் தர மதிப்பீட்டைக் குறைத்துள்ளதோடு, அமெரிக்கப் பொருளாதாரம் மீது கவலையும் எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய தடை நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி, சொந்த நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.