சூறாவளி பாதிப்பிலிருந்து காய்கறி உற்பத்தியை நிலைப்படுத்த வேண்டும்: சீனா
2023-08-14 15:04:26

அண்மையில் டொக்சூரி சூறாவளியால் சீனாவின் சில பகுதிகளில் காய்கறி சாகுபடிக்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காய்கறி வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. காய்கறி விநியோகத்துக்கும், இலையுதிர் மற்றும் குளிர்கால காய்கறியின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை உறுதிப்படுத்தும் விதமாக, காய்கறி கூடை எனும் வாழ்வாதார திட்டப்பணிக்கு பல்வேறு மாநகராட்சித தலைவர்கள் பொறுப்பேற்பதை நன்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து முதலிய பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து பேரிழவின் பாதிப்பை எல்லா வழிகளிலும் தீர்க்க வேண்டும் என்றும் சீன வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.