சீனர்கள் மீது தாக்குதல் தொடுத்த குற்றவாளிக்குத் தண்டனை விதிக்க வேண்டும்:சீனா
2023-08-14 18:32:21

பாகிஸ்தானின் குவாடார் துறைமுகத்தில் சீன பொறியியலாளர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல் குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தார். பயங்கரவாத இச்செயலுக்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கவும், சீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கையை எடுக்கவும் வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சீனா பாகிஸ்தானுடன் இணைந்து, பயங்கரவாத அச்சுறுத்தலைக் கூட்டாக தடுத்து, பாகிஸ்தானிலுள்ள சீனத் தரப்பினர், நிறுவனம் மற்றும் திட்டப்பணிகளின் பாதுகாப்பை பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்யும் என்றும், சீன-பாகிஸ்தான் நட்புறவையும் சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானத்தையும் சீர்குலைக்க முயலும் எந்த சூழ்ச்சியும் வெற்றி பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.