உக்ரேன்: ரஷியாவில் மேலதிகமான குண்டுவெடிப்புகள்
2023-08-14 15:04:52

அண்மையில் கிரிமியா பாலம் மீது தாக்குதல் தொடுத்த சம்பவத்துக்கு உக்ரேன் பொறுப்பேற்றுள்ளது என்று உள்ளூர் நேரப்படி 13ஆம் நாள், காணொளி உரையில் உக்ரேன் அரசுத் தலைவர் செலென்ஸ்கி தெரிவித்தாக ரஷிய ஆர்.ஐ.ஏ நியூஸ் செய்திஊடகம் அறிவித்துள்ளது.

ரஷியத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, மாற்றியமைக்கப்பட்டுள்ள ஏஸ்-200 ஏவுகணையைப் பயன்படுத்தி கிரிமியா பாலம் மீது தாக்குதல் நடத்த உக்ரேன் முயன்றுள்ளது. இந்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டு, இப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது என்று ரஷிய ஆர்.ஐ.ஏ நியூஸ் செய்திஊடகம் வெளியிட்டது.

ரஷியாவில் வலுவடைந்த உளவு வலைப்பின்னல்களை உக்ரேன் உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ரஷியாவில் நிகழும் என்று உக்ரேன் அரசுத் தலைவர் அலுவகத்தின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியக் ஆகஸ்ட் 10ஆம் நாள் ஒளிப்பரப்பப்பட்ட பேட்டியில் தெரிவித்தார்.