7வது பெய்ஜிங் சர்வதேசத் திபெத்தியல் ஆய்வுக் கூட்டம் துவக்கம்
2023-08-14 19:13:06

7வது பெய்ஜிங் சர்வதேசத் திபெத்தியல் ஆய்வுக் கூட்டம் ஆக்ஸ்டு 14ஆம் நாள் துவங்கியது. 3 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தில், திபெத்தியல் ஆய்வின் எதிர்காலத்தை முன்நோக்கி பார்க்கும் விதம், பொருளாதார மற்றும் கிராமப்புற வளர்ச்சி, கல்வி, திபெத் மரபுவழி புத்தமதம், திபெத் மொழியிலான ஆவணங்கள், சமூக வளர்ச்சி முறை மாற்றம், சமஸ்கிருதம் முதலிய 20 துறைகள் குறித்து, 300க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்களும், அறிஞர்களும் பரிமாற்றம் மற்றும் விவாதம் நடத்துகின்றனர்.

இக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ள நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூறுகையில், திபெத் பண்பாடு, சீனப் பண்பாட்டின் முக்கியப் பகுதியாகும். திபெத்தின் செழுமையான வளர்ச்சியை முன்னேற்றுவது, திபெத்தில் பல்வேறு தேசிய இன மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு, திபெத்தியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம், நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றி, மனித குல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்குவதற்குப் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.