மணிக்கல் மற்றும் நகை ஏற்றுமதி பற்றி புதிய நெடுநோக்கு திட்டம்:இலங்கை
2023-08-14 10:47:33

மணிக்கல் மற்றும் நகை தொழிலின் ஏற்றுமதியிலிருந்து, ஆண்டுக்கு 200 கோடி அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டும் இலக்கை நனவாக்கும் வகையில், சீரான கட்டமைப்புடனான நெடுநோக்கு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே சுட்டிக்காட்டியதாக, அரசுத் தலைவருக்கான ஊடகப் பிரிவு 13ம் நாள் தெரிவித்தது.

மணிக்கல் மற்றும் நகை பொருட்களின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் திட்டம் குறித்து, அரசுத் தலைவர் செயலகத்தில் ஒரு விவாதக் கூட்டம் நடத்தப்பட்டது.

மணிக்கல் மற்றும் நகை தொழிலின் சவால்களைச் சமாளித்து, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான முக்கியத்துவத்தை அரசுத் தலைவர் வலியுறுத்தினார் என்று இக்கூட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.