சீன வாகன அணி பாகிஸ்தானில் தாக்குதலுக்குள்ளானது
2023-08-14 10:49:30

பாகிஸ்தானின் கவாடார் துறைமுகத்தைச் சேர்ந்த சீன திட்டப்பணிக் குழுவின் வாகன அணி ஆகஸ்ட் 13ஆம் நாள் 9:17மணியில் கவாடார் விமான நிலையத்திலிருந்து துறைமுகத்துக்குத் திரும்பிய வழியில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குள்ளானது. அதில் சீன குடிமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை.

இத்தாக்குதல் நடத்தியவருக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் சீன மக்கள், நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் விதம், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கராச்சியிலுள்ள சீனத் துணை தூதரகம் இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளது.

சீனத் துணை தூதரகம் அவரச திட்டத்தை உடனடியாகத் தொடக்கியது. தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த, எச்சரிக்கையை உயர்த்திப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் துணை தூதரகம் உள்ளூர் சீன மக்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடம் நினைவூட்டியுள்ளது.