மாஸ்கோ சர்வதேச பாதுகாப்புக் கூட்டத்தில் சீனா பங்கேற்ப்பு
2023-08-15 10:47:53

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வூச்சியன் ஆகஸ்ட் 14ஆம் நாள், அண்மையில், இராணுவ விவகாங்கள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ரஷிய மற்றும் பெலாரஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் அழைப்பின் பேரில், சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லீசாங்ஃபூ ஆகஸ்ட் 14ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை, ரஷியாவில் பயணம் மேற்கொண்டு, 11ஆவது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுக்கின்றார். மேலும், பெலாரஸில் அவர் பயணம் மேற்கொள்வார் என்று வூச்சியன் தெரிவித்தார்.

தவிரவும், ஆண்டுத் திட்டம் மற்றும் சீன-தாய்லாந்தின் ஒரு மிக்க கருத்துகளின்படி, “கமாண்டோ 2023 என்ற” சீன-தாய்லாந்து தரைப்படை கூட்டுப் பயிற்சி ஆகஸ்ட் பிற்பாதி முதல் செப்டம்பர் திங்கள் துவக்கம் வரை, தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு தரப்புகளின் தரைப்படைகளின் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பு, இரு நாடுகளின் இராணுவ உறவின் வளர்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை இக்கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.