சீனாவின் கிராமப்புறத்தில் மின்னணு வணிக வளர்ச்சி
2023-08-15 17:43:17

கடந்த சில ஆண்டுகளாக, சீன வணிக அமைச்சகம் உள்ளிட்ட வாரியங்கள், கிராமப்புறத்தில் மின்னணு வணிக அலுவலின் பரவல் பணியை முன்னேற்றி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளன. கிராமத்தில் மின்னணு வணிக அலுவலின் உயர்தர வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றப்படும் என்று சீன வணிக அமைச்சகம் ஆக்ஸ்டு 15ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்பணியில், 2000 கோடி யுவானுக்கு அதிகமான முதலீட்டின் மூலம், 1489 மாவட்டங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு, 2600க்கும் மேலான மாவட்ட நிலை மின்னணு வணிகச் சேவை மற்றும் போக்குவரத்து மையங்களும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலான கிராம நிலை மின்னணு வணிகச் சேவை மற்றும் போக்குவரத்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டின் இறுதிவரை, சீனக் கிராமப்புறத்தில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியுள்ளது. 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரை, கிராமப்புறத்தில் இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை 18 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில், கிராமப்புறத்தின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றும் அடிப்படையில், கிராமப்புறத்தில் மின்னணு வணிக அலுவலின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.