வட இந்தியாவில் புயல் மழையில் 49 சாவு
2023-08-15 16:18:35

வட இந்தியாவில் அண்மையில் புயல் மழை தொடர்ந்தால், வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு நிகழ்ந்துள்ளன. இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரஞ்சல் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். பத்துக்கு மேலானோர் காணாமல் போயினர்.

பிரிட்டன் கார்டியன் செய்நாளாடு ஆகஸ்ட் 14ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, தொடர்ந்த புயல் மழையால், வட இந்தியாவில் அமைந்துள்ள இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரஞ்சல் மாநிலங்களில் பாலம் மற்றும் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

புயல் மழை உள்ளூர் பொது மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுதலைக் கொண்டு வருவதோடு, தானிய உற்பத்திக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் இது வரை, வழமைக்கு மாறான காலநிலையால், இந்திய தானிய உற்பத்தி அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. உள்நாட்டில் தானிய விலையின் உயர்வைத் தடுக்கும் வகையில், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றுமதித் தடைகளை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தார். தற்போது, ஆசிய அரிசி விலை, கடந்த 15 ஆண்டுகளில் மிக உயர்வான நிலையில் உள்ளது.