கடந்த தசாப்தத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சீனாவின் மாபெரும் முயற்சிகள்
2023-08-15 16:38:28

இவ்வாண்டின் ஆகஸ்ட் 15ஆம் நாள், சீனாவின் முதலாவது தேசிய சூழலியல் தினம். கடந்த பத்து ஆண்டுகளில், சூழலியல் கட்டுமானத்தில் சீனா பெற்றுள்ள சாதனைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த தசாப்தத்தில், முழு நாட்டிலும் காடுகளின் நிலப்பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், செயற்கை காடுகளின் நிலப்பரப்பு 8கோடியே 76இலட்சம் ஹெக்டரை எட்டி, உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் புல் நிரப்பரப்பு சுமார் 26கோடியே 50இலட்சம் ஹெக்டரை எட்டி, உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சதுப்பு நிலங்களின் மொத்த பரப்பளவு உலகளவில் 4வது இடத்தில் உள்ளது. அதோடு, சதுப்பு நிலம் நாட்டில் சட்டப்படி பன்முகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றது.

மேலும், உரிய கட்டுபாட்டு நடவடிக்கைகளின் மூலம், தற்போது நாட்டில் 73.8விழுக்காட்டு ஏரி நீர் சிறந்த தர நிர்ணயங்களைப் பூர்த்தி செய்கின்றது.

பாலைவனமா நிலத்தின் பரப்பளவும் குறைந்து வருகிறது. 2கோடியே 3இலட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் மணல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது.

தேசிய நிலை பூங்காகளின் கட்டுமானம் மூலம், தேசிய முதல் தர பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் மற்றும் தாவரங்களில் 80விழுக்காட்டுக்கு மேலுக்கு புகலிடம் அளிக்கப்படுகின்றது.

காடுகள் மற்றும் புல்வெளிகளில் தீயால் ஏற்பட்ட சேத விகிதங்கள் முறையே ஆயிரத்துக்கு 0.9 மற்றும் ஆயிரத்துக்கு 3க்கு குறைவாக இருக்கிறன. இவை, உலகின் சராசரியான நிலையை விட குறைவாக உள்ளன.

தவிரவும், 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, சீனாவில் தீவிர மாசுபட்டு நாட்களின் எண்ணிக்கை 92விழுக்காடாக குறைந்துள்ளது.