© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்காவின் "நியூயார்க் போஸ்ட் நாளேடு" வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த மாவி தீவில் நிகழ்ந்த காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி 13ஆம் நாள் மாவி தீவிபத்தால் அதிகரித்து வரும் இறப்புகள் குறித்து கேட்ட போது, டெலாவேர் மாநிலத்தில் ஒரு கடற்கரையில் சூரிய குளியல் மேற்கொண்டிருந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடென், “எந்தக் கருத்தும் இல்லை” என்று பதிலளித்தார். பைடனின் இப்பதில் விரைவாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஹவாய் தீவுக்கூட்டங்களின் 2வது பெரிய தீவாக மாவி தீவு விளங்குகிறது. இத்தீவில் 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. ஹவாய் மாநிலத்தின் அவசர விவகார நிர்வாகத் துறை வெளியிட்ட செய்தியின் படி, 8ஆம் நாள் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. சூறாவளி மற்றும் வறட்சி ஆகிய காரணமாக, காட்டுத் தீ வேகமாக பரவியது. இது, கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான தீ விபத்து என்று ஹவாய் மாநிலத்தின் தலைவர் ஜோஷ் கிரீன் தெரிவித்தார்.