நாகரிகப் பரிமாற்றங்களில் கவனம் குவித்த சீன-ஆப்பிரிக்க ஊடக ஒத்துழைப்பு மன்றம்
2023-08-15 08:09:02

2023ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கூட்டாளிகளுடனான ஊடக ஒத்துழைப்பு மன்றக் கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் நாள் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது. கென்யா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 27 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களின் இயக்குநர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், சீன மற்றும் ஆப்பிரிக்க தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோர் இந்த மன்றக் கூட்டதில்  கலந்து கொண்டனர். இம்மன்றத்தின் ஒரு முக்கிய சாதனையாக, 2023ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கூட்டாளிகளுடன் ஊடக ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

நாகரிகங்களிடையே பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் என்ற கருப்பொளைக் கொண்ட இந்த மன்றக்கூட்டம்,  சீன ஊடக குழுமம் மற்றும் ஆப்பிரிக்க ஒளிபரப்பு ஒன்றியம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது.