ஹவாய்க்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வெப்ப மண்டல சூறாவளி
2023-08-16 17:34:47

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த மாவ்யி மாவட்டம் வெளியிட்ட புதிய தகவலின்படி, மாவ்யி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய்கிழமை வரை 106ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பெய்ஜிங் நேரப்படி 16ஆம் நாள் காலை வரை, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில், பெர்னாண்டோ எனும் முதல் நிலை சூறாவளி அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனிடையில், கிரெக் எனும் வெப்ப மண்டல சூறாவளி குவாம் தீவுக்கு மேற்கிலுள்ள கடற்பரப்பில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இவ்விரு சூறாவளிகள் நெருங்கும் போக்கில் மழை பெய்யும். அதனுடன் வீசும் கடும் காற்று, ஹவாய்க்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டது.