யீபின் நகரில் நடைபெறும் சிஎம்ஜி 2023 நிலா விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி
2023-08-16 18:36:03

சீன ஊடகக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டு நிலா விழா கொண்டாட்டத்துக்கான இரவு கலை நிகழ்ச்சி, யாங்ச்சி ஆறு கடந்து செல்லும் முதல் நகரம் எனப் போற்றப்படும் சிச்சுவான் மாநிலத்தின் யீ பின் நகரில் நடைபெற உள்ளது. சீனத் தேசப் பண்பாட்டின் தொடர்ச்சி, புத்தாக்கம், ஒன்றிணைப்பு, அமைதி உள்ளிட்ட இயல்புகளை வெளிப்படுத்தும் விதமாக, கவிதை, மது, நிலா, நீர், மூங்கில் ஆகிய 5 கலாச்சாரச் சின்னங்களின் அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.

இவ்வாண்டின் நிலா விழாவுக்கு 2 நாட்களுக்குப் பிறகு தேசிய விழா வரவேற்கப்பட உள்ளது. இந்நிலையில், மகிழ்ச்சிகரமான சூழ்நிலையும் தேசம் மற்றும் வீட்டின் மீதான அன்புணர்வும் மேலும் சிறப்பாக உணரப்படலாம். செப்டம்பர் 29ஆம் நாளிரவு 8 மணிக்கு தொலைக்காட்சி, வானொலி, புதிய ஊடக தளங்கள், வெளிநாட்டுச் சமூக ஊடகங்கள் உள்ளிட்வற்றின் மூலம் இக்கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்படும்.